Rooted in tradition. Guided by truth.

Mr. AVR Sathish Kumar

திருச்சியைச் சேர்ந்த திரு. AVR சதீஷ் குமார் அவர்கள் 1995ஆம் ஆண்டில் ஜோதிடத்தின் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டு தனது பயணத்தை தொடங்கினார். சுயமாக ஜோதிட நூல்கள் வாசித்த அவர் 1997ஆம் ஆண்டு சமயபுரத்தில் திரு. தாமோதரன் ஐயா அவர்களிடம் பாரம்பரிய ஜோதிட முறையை கற்றுத் தேர்ந்தார்.

ஜோதிட பலன்களை வழங்கியதுடன், ஆன்மிகம், இதிகாசங்கள் மற்றும் பாரம்பரிய அறிவியல் குறித்து ஆழ்ந்த ஆய்வில் ஈடுபட்டார்.

2014ஆம் ஆண்டு "ஜோதிட நாஸ்டர்டாமஸ்" எனப் போற்றப்பட்ட திரு. நெல்லை K. வசந்தன் ஐயா அவர்களை சந்தித்து, 2022ஆம் ஆண்டு வரை அவருடன் இருந்து ஜோதிடத்தின் உயர்ந்த நுணுக்கங்களையும் நடைமுறை அணுகுமுறையையும் கற்றார்.

அவரது அனுபவத்தையும் ஆராய்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு "AVR PREDICTIVE FORUM" என்கிற நிறுவனத்தை நிறுவி, அதன் மூலம் பல தரமான மாணவர்களை அவர் உருவாக்கி வருகிறார்.